Sunday, May 23, 2010

நேரமில்லை.....!

எதிர் வீட்டில் மரணம்
என் இரண்டாம் மாடி வீட்டில்
இயல்பாய் அனைத்தும்.....
சலனமற்று கிடத்தப்படும்
மூதாட்டி தெரிகிறாள்.....
அவள் பெயர் தெரியாது
எப்படியிருந்தாளென்று தெரியாது
அவள் ஆசைகள் இவ்வுலகில்
நிறைவேறியதா தெரியாது
அவளைப் பற்றி எனக்கென்ன கவலை
ஆயிரம் வேலையெனக்கு
அலுவலகம் போகவேணும்
கோப்புகள் பார்க்கவேணும்
கலந்தாய்வில் பங்கேற்க வேணும்
சாப்பிட வேணும்...தூங்க வேணும்
நேரமில்லை காலம் வென்ற
அவளைப்பற்றி யோசிக்க....

Monday, May 10, 2010

சிரிப்பு

கள்ளம் கபடமற்ற சிரிப்பென்றெனர்
நான் குழந்தையாய் இருக்கையில்
கள்வா,இந்த குமரியின் இதயத்திருடா
உன் நினைவால் நித்தம் சிரிக்கின்றேன்,
கன்னம் சிவக்கின்றேன்.....
பேதை பெண்ணானேன்
பித்துமானேன்.....
இந்த சிரிப்பை என்னென்று சொல்வேன்?

Sunday, May 9, 2010

என் துணையே

கரடு முரடான பாதையிலேயே
நடக்க விரும்புகிறேன்
என் கைகளை இறுகப்பிடித்து
நீ வழித்துணையாய் வருவதால்.