Tuesday, September 20, 2011

நெருக்கம்!

நீ பிரிந்திருப்பதால் வருத்தமில்லை...
நிஜத்தில் இல்லா நெருக்கத்தை
நினைவில் இருத்தி மகிழ்ந்திடுவேன்...

Tuesday, July 12, 2011

படைத்தவனா? படைக்கப்பட்டவனா?

எங்கும் இருப்பான் இறைவன்....
அவன்மட்டும் தானா?
எங்கும் இருக்கிறாய் நீ...
என்னைப் படைத்தவனா?
எனக்காக படைக்கப்பட்டவனா?

Monday, June 13, 2011

நட்பென்னும் உலகத்திலே!

நாமாய் உருவாக்கிக் கொள்ளும் பந்தமிது...
எதிர்பார்பில்லை ஒப்பீடில்லை ஏற்றத்தாழ்வில்லை
நமக்குள் பேதமேதுமில்லை;
நெஞ்சார்ந்த அன்பு மட்டுமுண்டு அளவில்லாமல்
புதிதாய் உணர்ந்தோம் நட்பென்னும் உலகத்திலே!

மகிழ்ச்சியில் தெறிவோமோ அறியோம்
துயரத்தில் பங்கெடுப்போம்
தோள் கொடுக்கும் தோழராய் அல்ல
உயிர் கொடுக்கும் தோழராய்...

இது உன்னது அது என்னது
பிரித்ததுப் பார்த்தில்லை என்றும்...
சின்ன சண்டைகள் உண்டு நம்மிடம்
பிரிவதற்க்காக அல்ல
சமரசமாய் விட்டுக்கொடுப்பதற்க்கு...

தவறுகள் செய்வோம் பின்
அதை உணரவும் செய்வோம்...
தட்டிக் கேட்கவும் செய்வோம்
தட்டிக் கொடுக்கவும் செய்வோம்...

பொய் ஏதும் சொல்லாமல்
முகமூடி ஏதும் இல்லாமல்
மனதில் பட்டதை பட்டென
சொல்லவும் முடியும் சொல்லாத
பல படிக்கவும் முடியும்...

நாம் நாமாய் உணர்வோம்
நட்பென்னும் உலகத்திலே!

Tuesday, June 7, 2011

யாசகம்!

என் தனிமைப் பொழுதும்
உன் பிரிவின் துயரும்
விடாது துரத்திடும் உன் நினைவுகளும்
மனதில் குடிகொள்ளும் வெறுமைத் உணர்வும்
விழியோரம் கசிந்திடும் கண்ணீர் துளியும்
நீ இல்லாத என் உலகின் பிம்பமாகின...

உன்னை நேசிக்கிறேன் என்றும் யாசிக்கிறேன்
என்னை மன்னிப்பாயா உடன் சேர்வாயா?
தொலைந்துவிட்ட என்னைத் தேடித் தருவாயா?

Tuesday, May 3, 2011

கவித்தூது...

கவிதாயினி என்னும் திமிரில் சொல்கிறேன்
என் முதல் கவிதையைப் படித்தவன் நீ...
காதலி என்னும் தவிப்பில் கேட்கிறேன்
அதன் அர்த்தம் படித்தாயா நீ...
எண்ணமும் எழுத்துமாய் உணர்த்துகிறேன்
புரிந்து கொள்வாயா நீ...

Saturday, April 2, 2011

போதும்!

ஆகாயத்திலிருந்து குதித்துவர வேண்டாம்...
அன்பை குறிப்பாய் உணர்த்தினால் போதும்...
எனக்காக யுத்தம் செய்ய வேண்டாம்...
என்னை விட்டுக் கொடுக்காதிருந்தால் போதும்...

பொய்யாய் புகழ வேண்டாம்...
மெய்யாய் பழகினால் போதும்...
மாட மாளிகை வேண்டாம்...
கூரை வீடானாலும் போதும்....

மகிழ்விக்க பரிசுப்பொருட்கள் தர வேண்டாம்...
துயரந்தாங்க தோள்சாய அனுமதித்தால் போதும்...
நீ நான் என்னும் ஒருமை வேண்டாம்...
நாம் என்னும் ஒற்றுமை போதும்....

வேண்டும் வேண்டாம்
ஏதாகினும் சொல்லிவிட்டால் போதும்...

Sunday, March 20, 2011

அப்பா...

அம்மா அன்பையும் நேர்மையும் கற்றுத்தந்தாள்
நீயோ வீரத்தையும் விவேகத்தையும் கற்றுத்தந்தாய்
கடும் உழைப்புக்கு உதாரணம் நீ...
என் முதலெழுத்துமானவன் நீ...
தலைவனவன் நீ...

கடன் பட்டு வாழ்கையில் அடிபட்டு
குடும்பத்திற்காக அனைத்தும் இழந்து நின்றாய்
சுயநலமாய் சிந்தித்தேன்
புரியாது உன்னை வெறுத்தேன்
கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்தேன்
வலித்தாலும் நேசித்தாய்
சிறு பெண்ணென்று கருதாது புரியவைத்தாய்...

பெண்ணென்று ஒடுக்கவில்லை என்னை
சிறகுகள் கொடுத்தாய் பரிசாய்...
கூண்டுச் சிறைக்குள் வைக்கவில்லை என்னை
சுதந்திரமாய் செயல்பட ஊக்கமும் தந்தாய்...
என் கனவுகளுக்கு வண்ணம் சேர்த்தாய்...

பத்து வயதில் உன்னை நண்பர்களிடம் என் HEROவென்று காண்பித்தேன்...
பருவ வயதில் உன்னை எதிர்த்து நிற்க்கவே துடித்தேன்...
இன்றோ இளைத்த உன் தோள்கட்க்கு வலுசேர்க்க விரைந்தேன்...
நீ ஓய்வெடுக்கும் காலம் வரும்...
உன்னோடு பக்கபலமாய் நான் வருவேன்
என்றென்றும்...

Sunday, March 13, 2011

நீ!

உன்னை நினைக்காது இருக்கத்தான் முயற்சிக்கின்றேன்
உன்னை நிந்திக்கவாவது நினைத்து விடுகிறேன்
உன்னை நிந்திக்கவா நேசிக்கவா?

Friday, March 11, 2011

Tsunami.... An alarm...

Everyone could have gone through the headlines of all the media channels today.

Human community sends its condolence to the people of Japan. Human constructions were destructed in minutes by the massive tidal waves. Hundreds lost their life (Still the toll is indexing high).Though Japan is prone to such natural destruction often; loss is same for every human being in this world.


We say we are in the world of advanced technology; but nature is proving that still there is a long way to go... Mankind is standing helpless witnessing the power of Nature...

Though Industrialization/Development is essential for a country, conserving nature is mandatory. We are bonded to the natural arena... Our lives are decided not on scientific advancements but how far we live in harmony with nature...

நிழலா நிஜமா...

உன் நிழலுருவத்தோடு பேசிப்பேசிப் பிதற்றுகிறேன்
நிஜ உருவத்தில் வந்தபோதும்...

Saturday, February 26, 2011

Facebook

My friends are there in Facebook... So am here...
Everyone will have such a story to enter Social Network...

We have our friends, relatives, beloved ones parted by distance but united on a single page
FACEBOOK

We never wanna disclose the happiest moments in person...
Instead “Status update” will speak about the achievement waiting for likes and comments...
In the world of technology, Social Networking pages have become another face to all...
Happy to have a digital mediator for anything and everything...

Socializing with unknown persons was criticized once; now it has become de Facto
I wonder how many guys will talk with opposite gender if it is not the social network
Getting to know about their crush is that easy with Facebook stuff

It is in this forum ideas are changing into action plans...
It is this network that connects people into groups...
Acknowledges the Achievements; appreciates the Talents...

Silent profile visits... Photos shared...Videos Posted... Likes & Comments...
Someone somewhere carefully collects for that special someone...

There are marriages decided on walls of Facebook
As well as breakups triggered by Facebook
There are friend requests still waiting for ‘Approval’
People still in “block listed”
Crushes turns to Committed
Committed turns to be in relationship
We have a column “Relationship Status” to update all...

It is boon or bane?
Leave it to your choice...


Thinking BIG!

Sometimes we think big and complex...
Fact is every issue has a very simple solution...
We always overlook it!

Saturday, February 19, 2011

வெற்றி

உன் நினைவுகளோடு- நான்
     போராட்டம் செய்தால் வெற்றி அடைவேன்
     அங்கு சமரசத்திற்க்கு இடமுண்டு....
     யுத்தம் செய்தால் தோற்று விடுவேன்
     அங்கு ஒருவர் மட்டுமே வெல்ல முடியும்...

உனக்கும் எனக்குமான வெற்றியே நிலையானது!
நீயே இல்லையெனில்- நான் மட்டும்
வெற்றி கொண்டு என்ன பயன்?

Thursday, February 3, 2011

ஆசை!

உண்மை மட்டுமே பேசித் திரிஞ்சேனே..
பொய் பேசவும் கத்துகிட்டேனே...
 மனசுக்குள்ள ஒளிச்சுவச்ச ஆசையெல்லாம்
ஒன்னொன்னா வெளிவருமே...
கனவுக்குள்ள பூட்டிவச்சேனே
கள்ளச்சாவி கொண்டு வந்தீகளோ?

தனியா இருக்கையில உன் தோள் சாய ஆசை
துணையா இருக்கையில இருகக் கைப் பிடிக்க ஆசை
நடந்து போகையில உன் பின்னால நடக்க ஆசை
இருந்து சரிசமமா நீ, உன் கூட நடத்திவர ஆசை

தெரிந்தும் தெரியாதது போல காட்டிகிட ஆசை
அறிந்தும் அறியாதது போல நீ நடந்துகிட ஆசை
உன் முகக் குறிப்பு நான் மட்டும் புறிஞ்சுகிட ஆசை
என் கண் அசைவை நீ மட்டும் தெறிஞ்சுகிட ஆசை

தொங்க தொங்க தாலி கட்டிகிட ஆசை
நம்மைப் போல பிள்ளை இரெண்டு பெத்துகிட ஆசை
நடை தளர்ந்து பார்வை மங்கி நரை கூடிப்போன பின்னாலும்
உனக்கு நான் எனக்கு நீயின்னு வாழ்ந்து மறைந்திட ஆசை

என் குலசாமி உன்னை கண்ணு முன்ன நிறுத்த வேணுமின்னு ஆசை!