Friday, September 17, 2010

தோழி!

என் தோழி விடை பெறுகிறாள்...
வாழ்வின் வேறு தளத்திற்கு செல்கிறாள்...
சிரித்து அனுப்பிவிட்டேன் நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு...

ஒன்றாய் வாழ்ந்த நாட்களை எண்ணி உரையாட நேரமில்லை...
அவளுக்காக வாங்கிய பரிசைக் கொடுக்க கைகளுக்கும் வலுவில்லை...
மறுமுறை சந்திக்க தருணமேற்படுத்தும் என்பதால் கொடுக்கவுமில்லை...

கலைத்து போட எங்கள் இல்லத்தின் குழந்தை அவள்...
சண்டை போட எங்கள் பாகிஸ்தான் அவள்...
உரிமை கோர எங்கள் காஷ்மீர் அவள்...

ஒரு தட்டில் சோறு உண்டதைச் சொல்வேனா?
மடி சாய்ந்து கதை பேசி மகிழ்ந்ததைச் சொல்வேனா?
பட்டபெயர் பல வைத்து அழைத்து சிரித்ததைச் சொல்வேனா?

முட்டிக் கொண்டதைச் சொல்வேனா?
பிறகு கட்டிக் கொண்டதைச் சொல்வேனா?
புதியதொரு பாதையில் தனித்தனியே பயணிக்கின்றோம்...

அடி தோழி! நட்பெனும் பந்தம் கொண்டோம்!
இம்மையிலும் மறுமையிலும் பிரியாதிருப்போம் என்றோம்!
அப்படியே வாழ்ந்தும் மறைவோம்!

Thursday, September 16, 2010

பரிசு...

அம்மா சுட்டுத் தரும் அதிரசமும் முருக்கும்
அப்பா வாங்கி தரும் புத்தாடையும்
அண்ணன் தரும் பேனாவும் பென்சிலும்
அஞ்சு பைசா மிட்டாய் வாங்கி பத்து நூறு தரும் உறவினரும்
என்னிக்கும் இல்லாம அன்னிக்கு மட்டும் எல்லோரும் எனை பார்த்து சிரிச்சு பேசுறதும்
என் சோட்டு பெண்டுகளெல்லாம் கூடி வாழ்த்து படிச்சதும்
அழகா இருக்க புள்ளனு சொல்லிபுட்டு தள்ளி நிக்குற என் வகுப்பு பயலுகளும்
எனக்கு தந்தது காலத்தால அழியாத நினைவுப் பரிசு
அது பிறந்தநாள் பரிசு!

நவயுக கர்ணன்!

கொடுத்தே பழகிவிட்டேன்

எடுக்கத் தெரியவில்லை

இதயத்தை !

நீ நான் நாம்...

என் அன்பின் உறைவிடம் எது என்றேன்?
உன் கண்கள் சொன்னது நான் என்று.

எனை அறவனைக்கும் வலிமை எது என்றேன்?
உன் கைகள் சொன்னது நான் என்று.
எனை காக்கும் கோவில் எது என்றேன்?
உன் இதயம் சொன்னது நான் என்று.
எனை தலாட்டும் இன்னிசை எது என்றேன்?
உன் திருவாய் மொழி சொன்னது நான் என்று.

நீயும் நானும் போய் நாமென்றாவது எப்பொழுது என்றேன்?
நம் உள்ளம் சொன்னது மனமொன்றி விரல்பற்றி மனப்பந்தல் காணும் நாளென்று.