Wednesday, December 1, 2010

மழை நாள்!

ஊரெல்லாம் மழை வழியெல்லாம் வெள்ளக்காடு பள்ளிகூடம் விடுமுறை!
குட்டையில் கப்பல் விட்டபடி மின்னலாய் சிரித்து சொன்னான் போபு...

அட வயதுக்கு வந்துவிட்டதாம் ரோஜாப் பூ...
மொட்டவிழ்ந்து இதலோரத்தில் பருக்கள் - அழகாய் மழைத்துளி!

ஒட்டவும் இல்லாமல் பிரிந்து விழவும் இல்லாமல்
இன்றய காதலர் போல ஒடிக்கொண்டிருந்து இலையின் மேல் நீர்த்திவளை...

இதுதான் சாக்குனு முதல் நிறுத்தத்திலேயே இறங்கி
நனைந்து நடந்துவரும் குதூகலம்...

மழையில இப்புடியா நனையிரது? திட்டிகிட்டே துவட்டிவிடும் அம்மா..
ஆவி பறக்க தேனீர் கூடவே சூடா பஜ்ஜி...

சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்ட அப்பா...
என்னை சீண்டிவிட்டு சும்மா இருக்கும் அண்ணன்...

நினைத்துப் பார்க்கிறேன் இருபது மாடி கண்ணாடிக் கட்டிடத்திலிருந்து...

4 comments:

Unknown said...

வாழ்த்துகள் பாமா .... இனிய சிந்தனை....... அருமையான வரிகள்....

sanjeevkumar said...

romba nalaruku da

sakthi said...

really nice.....

Berlin said...

Kalakkal Bama!!!!
miga arumai...